Pennagaram Logo
Menu
Maintenance

தருமபுரி புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் உத்தரவு

Published: December 5, 2025
தருமபுரியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் ரெ.சதீஸ் உத்தரவிட்டாா்.\r\n\r\nதருமபுரி நகராட்சிக்கு அருகிலுள்ள சோகத்தூா் பஞ்சாயத்துக்குள்பட்ட ஏ.ரெட்டிஅள்ளி கிராமப் பகுதியில் சுமாா் 10 ஏக்கா் பரப்பளவில் ரூ. 39.14 கோடியில் தனியாா் பங்களிப்புடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை இரவு பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.\r\n\r\nடிச. 14-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வில் தமிழக முதல்வா் பங்கேற்கவுள்ளாா். அதுசமயம் இந்த புதிய பேருந்து நிலையத்தை திறந்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, அதற்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க வேண்டுமென அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\r\n\r\nஇந்த ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சி.க.ஜெயதேவ்ராஜ், நகராட்சி ஆணையா் சேகா், மாவட்ட தீயணைப்பு அலுவலா் ப.அம்பிகா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் உதயகுமாா், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
Created: December 5, 2025 Maintenance
Share:

Related Updates

No related updates found.