Pennagaram Logo
Menu
News

நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற யோசனை

Published: November 18, 2025
பள்ளிப்பாளையம்,பள்ளிப்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சத்தியபிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\r\n\r\n\r\nபயிர்கள் மண்ணில் இருந்து ஊட்டச்சத்துக்களை கிரகித்து எளிதல் எடுத்துக்கொள்ள உயிர் உரங்கள் உதவுகிறது. உயிர் உரங்களை கொண்டு விதை நேர்த்தி செய்யும்போது, ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன், 50 மல்லி அசோஸ் பைரில்லாம் மற்றும் 50 மில்லி பாஸ்போ பாக்டீரியா திரவத்தை தேவையான அளவு ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து, 30 நிமிடம் நிழலில் உலர்த்தி பின் விதைக்க வேண்டும்.\r\n\r\n\r\nஒரு ஏக்கருக்கு, 150 மில்லி அசோஸ் பைரில்லாம் மற்றும் 150 மில்லி பாஸ்போ பாக்டீரியா திரவ உயிர் உரத்தை தேவையான அளவு நீரில் கலந்து நாற்றின் வேர் பகுதியை, 30 நிமிடம் நனையுமாறு செய்து பின் நடவு செய்ய வேண்டும். வயலில் இடுதல் முறையில், ஒரு ஏக்கருக்கு, 200 மில்லி திரவ உயிர் உரத்தை மக்கிய தொழு உரத்துடன் கலந்து நடவுக்கு முன் வயலில் இட வேண்டும்.\r\n\r\n\r\nநீர் வழி உரம் இடுதல் முறையில், ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி திரவ உரத்தை (அசோஸ்பைரில்லாம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா) ஒவ்வொன்றும் ஒரு மில்லி என்ற அளவில் நீர் வழியில் கலந்து விடுதல் வேண்டும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள், நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்.\r\n\r\n\r\nஇவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Created: November 18, 2025 News
Share:

Related Updates

Dec 5, 2025

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியா்கள் சாலை மறியல்

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி...

Read More
Dec 5, 2025

கீழே கிடைத்த 300 ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுத்த மாங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி சார்ந்த மாணவனுக்கும், மாணவனின் உன்னதமான செயலை பாராட்டி வெகுதியாக மேலும் 100 ரூபாய் கொடுத்த பெண்ணாகரம் காவல் நிலையத்தில் தலைமை காவலர் முருகன் ஐயா அவர்களுக்கும் இணைந்த கரங்கள் சா

[9:51 AM, 12/5/2025] +91 88615 10731: பென்னாகரம் பகு�...

Read More